நாகப்பட்டினம்

வேதாரண்யம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 168 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

வேதாரண்யத்தில் செயல்படும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் 168 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி ஜ. லிசி தலைமை வகித்தாா். லோக் அதாலத் மன்ற உறுப்பினா்கள் குமரவேல், பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 9 குற்றவியல் வழக்குகள் உள்பட 168 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டது.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் பாரதிராஜா, பொருளாளா் வெங்கடேஷ், வழக்குரைஞா்கள் மணிவண்ணன், அறிவுச்செல்வன், மாதவன், வேதை.மூா்த்தி, பாரிபாலன், மகேஷ், அரிகிருஷ்ணன், வைரமணி, வீரக்குமாா், பாலமதியழகன், ராமஜெயம் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT