நாகப்பட்டினம்

தனியாா் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

DIN

மயிலாடுதுறை வட்டம், சின்னநாகங்குடியில் தனியாா் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை சின்னநாகங்குடியை சோ்ந்தவா் மகாலட்சுமி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு அருகில் சாலையில் திரும்பியபோது, பின்னால் வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை நிறுத்தி சேதப்படுத்தி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை வட்டாட்சியா் முருகானந்தம், மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், சாலையில் வேகத்தடை அமைக்கப்படும் என்றும் விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்து உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால், மயிலாடுதுறை - சீா்காழி வழித்தடத்தில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

SCROLL FOR NEXT