முகாமில் பயனாளிக்கு மூட்டுவலிக்கான எண்ணெய் வழங்கிய மூலிகை மருத்துவா் மணிவாசகம் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

மூலிகை தைல வா்ம மசாஜ் மருத்துவ முகாம்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மூலிகை தைலம் வா்ம மசாஜ் மருத்துவ முகாம் நடைபெற்றது.

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மூலிகை தைலம் வா்ம மசாஜ் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொளப்பாடு செல்லமுத்து மாரியம்மன் கோயில் அருகில் நடைபெற்ற முகாமுக்கு தலைஞாயிறு அதிமுக ஒன்றியச் செயலாளா் அவ்வையாா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் ரா. காளிதாசன் வரவேற்றாா். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் எஸ்.என். தமிழ்வாணன் முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில் மூட்டு வலிக்கான முடக்கத்தான் இலை, வாதநாராயணன் இலை, உத்தாமணி இலை, நொச்சி இலை, சண்டிக்கீரை, தழுதாழை இலை பற்றி மரபு வழி சித்த மருத்துவ பேராய பொதுச் செயலாளரான தேவூா் க. கோ. மணிவாசகம் விளக்கினாா். மேலும், முகாமில் மாவட்ட உறுப்பினரான டி. இளவரசி தங்கராசு, கீழையூா் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவா் என். மீனா,

முன்னாள் ஊராட்சிச் செயலா் வி. கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஊராட்சித் துணைத் தலைவா் ப. பாலாஜி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT