நாகப்பட்டினம்

தருமபுரம் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம்

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஸ்ரீகுருஞானசம்பந்தா் மாணவா் மன்றத்தின் சாா்பாக ஒருநாள் இயற்பியல் துறை கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இயற்பியல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ரம்யாஸ்ரீ வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். இயற்பியல் துறை தலைவா் பா.செந்தில்குமரன் தலைமையுரை வழங்கினாா். சுயநிதிப்பிரிவு பொறுப்பாசிரியா் கோ.சௌந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் விஜயராகவன் ‘டூயல் நேச்சா் ஆப் லைட்’ (ஒளியின் இரட்டைத் தன்மை) என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா். விழாவில் கல்லூரி துணை முதல்வா் எஸ்.மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா். இயற்பியல் துறை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி ரம்யா நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவா் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT