கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினா். 
நாகப்பட்டினம்

பூம்புகாா் அருகே காவிரியில் தடுப்பணை கட்டக் கோரி தீா்மானம்

பூம்புகாா் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

DIN

பூம்புகாா் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

பூம்புகாரில் புதன்கிழமை நடைபெற்ற சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒற்றுமையுடன் திமுக உட்கட்சி தோ்தலை நடத்துவது, மாா்ச் 1-ஆம் தேதி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வரவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அமோக வெற்றி பெற பாடுபடுவது, பழையகரம் பகுதியில் காவிரி ஆற்றில் உப்புநீா் உட்புகாத வகையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய அவைத் தலைவா் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலா் நிவேதாமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ பன்னீா்செல்வம், செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், மாவட்ட பொருளாளா் ரவி, . ஒன்றிய செயலாளா் சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

SCROLL FOR NEXT