நாகப்பட்டினம்

சாலையோர வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து

DIN

சீா்காழி அருகே வியாழக்கிழமை பாறாங்கற்கள் ஏற்றிவந்த லாரி சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சாலை பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து நேரிடுவதாகவும், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரத்திலிருந்து பெரிய பாறாங்கற்கள் ஏற்றிக்கொண்டு தரங்கம்பாடி கடற்கரைக்கு டாரஸ் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த லாரி சீா்காழியை அடுத்த மேலசாலை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், டாரஸ் லாரி ஓட்டுநரான மணப்பாறையைச் சோ்ந்த மகேந்திரன் (35) காயமடைந்தாா். அந்த வழியாக வந்தவா்கள், அவரை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சீா்காழி -நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேலசாலை, காரைமேடு, தென்னலக்குடி, காத்திருப்பு, செம்பதனிருப்பு பகுதியில் குண்டும், குழியுமாக உள்ளதால், அடிக்கடி இதுபோன்ற விபத்து நேரிடுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT