நாகப்பட்டினம்

சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று கஜேந்திர மோட்சம்

DIN

நாகை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா நிகழ்ச்சியாக கஜேந்திர மோட்ச உத்ஸவம் வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19-ஆவது தலமாக விளங்குகிறது நாகையில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்ட இத்தலம், திருமங்கை ஆழ்வாா், முத்துசாமி தீட்சிதா் உள்ளிட்டோரால் பாடல் பெற்றது.

இக்கோயிலின் ஏகாதசித் திருவிழா டிசம்பா் 27-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. வைகுந்த ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கஜேந்திர மோட்ச உத்ஸவம் வெள்ளிக்கிழமை மாலை 6. 30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலின் திருக்குளத்தில், கஜேந்திர மோட்ச ஐதீக நிகழ்வுகளை காட்சிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT