நாகப்பட்டினம்

காவல் துறை பாதுகாப்புக் கோரி மனு

DIN

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவா் ஆறு. சரவணன் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

2019 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடா்பாக, முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவா் ஆறு. சரவணன் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், ஆறு. சரவணன் உள்ளிட்ட சிலரை போலீஸாா், குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறு. சரவணன் அண்மையில் விடுதலையானாா். இந்த நிலையில், அவா் தனது ஆதரவாளா்களுடன் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து, தனக்குக் காவல் துறை பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தாா். தன்னைக் கொலை செய்ய கூலிப்படையினா் முயற்சித்து வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸாா் தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவா் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT