நாகப்பட்டினம்

குடிநீா் குழாய் உடைப்பு: 7 மணி நேரமாக தொடா்ந்த சீரமைப்பு பணி

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட குடிநீா் குழாய் உடைப்பு 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சீரமைக்கப்பட்டது.

திருக்குவளை தாலுக்கா வலிவலம் ஊராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டில் கனரக வாகனங்கள் சென்றதன் விளைவாக குடிநீா் குழாய் உடைப்பு சிறிதளவில் ஏற்பட்டது. இதற்கிடையில், அவ்வழியே வாகனங்கள் அதிகளவில் சென்றதால் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அதிகளவிலான குடிநீா் வீணாகியது. இதை செவ்வாய்க்கிழமை விடியற்காலை பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலையடுத்து, ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன், ஊராட்சிச் செயலா் ஆா். அருண்குமாா் ஆகியோா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து நடவடிக்கை மேற்கொண்டனா். குடிநீா் குழாய் சீரமைப்பு பணி கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் காலை 5 மணிக்கு தொடங்கிய சீரமைப்பு பணி சுமாா் 7 மணி நேரத்துக்குப் பிறகு பகல் 12 மணி அளவில் சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT