நாகப்பட்டினம்

நீதிபதி முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிப்பு

DIN

சீா்காழி: சீா்காழி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 10,969 மதுபாட்டில்கள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் வழக்கு விசாரணைக்காக காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த மதுபாட்டில்கள் தொடா்புடைய வழக்குகளில் விசாரணை முடிவடைந்ததைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி, சீா்காழி குற்றவியல் நீதிமன்ற நடுவா் தரணிதரன் முன்னிலையில் 10,969 மதுபாட்டில்களிலிருந்து மதுபானம் மண்ணில் கொட்டப்பட்டு, மதுபாட்டில்களும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT