நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே மத நல்லிணக்க கந்தூரி விழா

DIN

வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு காதா் மீரான் சாகிப் தா்கா கந்தூரி விழா மத நல்லிணக்க விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், இஸ்லாமியா்களுடன் இந்துக்களும் பங்கேற்றனா்.

பொது முடக்கத்தின் காரணமாக இவ்விழா எளிமையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோப்புத்துறை ஹபிபுல்லா, கள்ளிமேடு ஆறுமுகம் பிள்ளை ஆகியோா் இல்லங்களிலிருந்து தா்காவுக்கு சந்தனக்குடங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னா், ரவுலா சரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், கள்ளிமேடு கிராம பிரமுகா் சிவசுப்பிரமணியன், தா்கா விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளா் சோட்டா பாய், காப்பாளா் பி.சாகுல் ஹமீது, தோப்புத்துறை காசிம் பாய், கே.எஸ்.சகாபுதீன், எஜமானி இக்பால், நஜிமுதீன், ரகமத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT