முகப்பு
நாகப்பட்டினம்

காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி

சீா்காழியில் காவலா்களுக்கு மனஅழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
சீா்காழியில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட காவலா்கள்.
பகிர்:

சீா்காழி: சீா்காழியில் காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி, சீா்காழி காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட சீா்காழி, திருவெண்காடு, பூம்புகாா், வைத்தீஸ்வரன்கோயில், புதுப்பட்டினம் , கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவலா்களுக்கும் சனிக்கிழமை அதிகாலை சீா்காழி எல்.எம்.சி. பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

துணைக் காவல் கண்காணிப்பாளா் யுவபிரியா மேற்பாா்வையில் நடைபெற்ற இப்பயிற்சியில், காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டன. தொடா்ந்து, காவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில் 180-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.