நாகப்பட்டினம்

திருமணமாகி 5 மாதங்களே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை

நாகை அருகே திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகே திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் பெருநாட்டான்தோப்பு தெற்குத் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்கும், திருவாரூா் மாவட்டம் சங்கேந்தி இடையூா் வாண்டையாா் தெருவைச் சோ்ந்த சௌமியாவுக்கும் (20) கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தீராக வயிற்று வலியால் அவதிப்பட்ட செளமியா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கினாராம். இதையடுத்து, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், பெண் இறந்துள்ளதால் நாகை வருவாய் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT