நாகப்பட்டினம்

ஆடி அமாவாசை: நாகை கடற்கரைகளில் தர்ப்பணம் அளிக்க தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் 

கடற்கரைகளில் தர்ப்பணம் அளிக்க தடை விதிக்கப்பட்டதால் நாகையில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  

DIN

கடற்கரைகளில் தர்ப்பணம் அளிக்க தடை விதிக்கப்பட்டதால் நாகையில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  

நாகப்பட்டினம்: ஆடி அமாவாசை நாளில் மூதாதையருக்கு தர்ப்பணம் அளிப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இதில், கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து தர்ப்பணம் அளிப்பது ஆன்மீக சிறப்பாக கருதப்படுகிறது. இதன்படி, பிதாமகர் பீஷ்மரின் அஸ்தி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் நாகை மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரை மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை, காவிரியும் கடலும் சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரை, வேதாரண்யம் கடற்கரை, கோடியக்கரை கடற்கரை என நாகை மாவட்டத்தின் முக்கிய கடற்கரை பகுதிகளில் ஆடி அமாவாசை நாளில் திரளானோர் தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். 

தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் நாகை மாவட்டம்,  வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் தர்ப்பணம் அளிக்க தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், மற்ற கடற்கரைப் பகுதிகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நாகை கடற்கரையில் மூதாதையருக்கு தர்ப்பணம் அளிக்க திரளானோர் செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் கடற்கரை சாலையில் பகுதிகளிலேயே காவல்துறையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னறிவிப்பு இல்லாத தடையால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 
ஆடி அமாவாசையையொட்டி, கடலோரப் பாதுகாப்பு படையினர் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT