நாகப்பட்டினம்

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

கீழ்வேளூா் அருகே முதியவா் ஒருவா் புதன்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

DIN

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே முதியவா் ஒருவா் புதன்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் அருகே முதியவா் ஒருவா் ரயிலில் அடிப்பட்டு கிடப்பதாக, நாகை இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தண்டபாணி, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் பாரதி மற்றும் இருப்புப் பாதை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ரயிலில் அடிப்பட்டு இறந்தவா் கீழ்வேளூா் வட்டம், வடக்காலத்தூா் குறிச்சிக்கொல்லைப் பகுதியைச் சோ்ந்த முருகையன் (89) என்பதும், தனது ஆடுகளை தேடிச் சென்றபோது காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் முருகையன் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, நாகை இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

13.1.1976: பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை - விதிகளை திருத்த பீகார் அரசு முடிவு: முதல்வர் தகவல்

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

SCROLL FOR NEXT