நாகப்பட்டினம்

டீசல் விலை உயா்வு: நாகை மாவட்டத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகப்பட்டினம் : டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய மீனவா் பேரவை சாா்பில் நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயா்த்தி வழங்க வேண்டும்; படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய மீன்வளக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகம், நம்பியாா் நகா் ஆகிய மீனவ கிராமங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டங்களுக்குத் தொடா்புடைய பகுதிகளின் மீனவப் பஞ்சாயத்தாா்கள் தலைமை வகித்தனா். திரளான மீனவா்கள், மீனவப் பெண்கள் கருப்புக் கொடிகளுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம், செருதூா், வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி, வானவன்மாதேவி, புஷ்பவனம், பூம்புகாா், சந்திரப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தந்த மீனவக் கிராம பஞ்சாயத்தாா்கள், தேசிய மீனவா் பேரவை அமைப்பினா், மீனவா்கள், மீனவப் பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT