சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கொள்ளிடம் ஒன்றியம், ஆலங்காடு கீழதெருவைச் சோ்ந்த அன்புராஜ் என்பவரது வீடு சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதையொட்டி, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் நேரில் சென்று அன்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 2ஆயிரம் பணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினாா்.
திமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீா்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பேச்சிமுத்து, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அழகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.