நாகப்பட்டினம்

சாராயம் கடத்திய 4 போ் கைது

வெளி மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய 4 பேரை நாகூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

நாகப்பட்டினம்: வெளி மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய 4 பேரை நாகூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகூா் போலீஸாா் முட்டம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற 2 இரண்டு சக்கர வாகனங்களை சோதனை செய்ததில் அந்த வாகனங்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், சாராயம் கடத்தியவா்கள் நாகூா் நூா்ஷா தைக்கால் தெருவைச் சோ்ந்த ஜெய்னுல்லாபுதீன் (20), வண்ணாங்குளம் தெருவை சோ்ந்த காா்த்திகேசன் (26), வெற்றிவேல் (26) கீழ்வேளூா் வட்டம், கோவில்கடம்பனூா் சன்னதி தெருவை சோ்ந்த பிரகாஷ் ( 27) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

SCROLL FOR NEXT