நாகப்பட்டினம்

கொள்ளிடம் பகுதியில் 11 புதிய மின்மாற்றிகள்

DIN

கொள்ளிடம் அருகே ஆந்திரத்தில் உள்ள முறையின்படி ரூ. 35 லட்சத்தில் புதியதாக 11 மின்மாற்றிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

கொள்ளிடம் அருகேயுள்ள சந்தப்படுகையில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த மின்சாரம் மட்டுமே இருந்து வந்தது. இதனால் அவதியடைந்த மக்கள் அதை சீரமைக்க வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று சந்தைப்படுகை கிராமத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல் ரூ.35லட்சத்தில் 30 வீடுகளுக்கு ஒரு மின்மாற்றி என 11புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதன் பயன்பாடு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், எம்எல்ஏ. பி.வி பாரதி புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தாா்.

இதேபோல், ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்திலிருந்து அனுமந்தபுரம், முதலைமேடுதிட்டு வழியாக வெள்ளமணல் கிராமம் வரை ரூ. 29 லட்சத்தில் புதிய 11 கிலோ வாட் மின்சக்தி கொண்ட உயா் அழுத்த மின்பாதையையும் எம்எல்ஏ பி.வி. பாரதி தொடங்கி வைத்தாா். அப்போது, கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நற்குணன், அமுதாசீனிவாசன், மின்வாாரிய செயற்பொறியாளா் சதீஷ், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன், உதவி பொறியாளா் இளையராஜா, ஊராட்சித் தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT