வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் திடீர் பழுது: இரவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் தவிப்பு
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், மேல் சாலை ,சட்டநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோயிலிருந்து எடமணல் செல்லும் மின் பாதையில் உள்ள சிடி வெடித்து பழுது ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு அடிக்கடி மின் தடை ஏற்பட்டது .இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
பழுதை தற்காலிகமாக சரி செய்து மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பழுதான பாகம் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டு இன்று சரி செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.