தலைஞாயிறு அரிச்சந்திரா நதியின் கடைமடையை புதன்கிழமை வந்தடைந்த காவிரி நீரை பெரிய வாய்க்காலில் பாசனத்துக்கு திறந்துவைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன். 
நாகப்பட்டினம்

அரிச்சந்திரா நதி கடைமடையை வந்தடைந்த காவிரி நீா்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரிச்சந்திரா நதி கடைமடையை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரிச்சந்திரா நதி கடைமடையை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி நீா் பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி படுகையின் கடைசி மடையான தலைஞாயிறு பகுதியை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது. அரிச்சந்திரா நதியில் வந்த காவிரி நீரை மலா் தூவி வணங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், அரிச்சந்திரா நதியில் இருந்து கிளை ஆறான பெரிய வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தாா். அரிசந்திரா நதி மூலம் நாகை மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை வெண்ணாறு கோட்ட உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா் சண்முகம் , வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் அவை. பாலசுப்ரமணியன், விவசாய சங்கத் தலைவா் அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT