முகப்பு
நாகப்பட்டினம்

சாத்தான்குளம் சம்பவம்: வணிகா்கள் நல சங்கம் சாா்பில் மெளன அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில், இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி.
பகிர்:


சீா்காழி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில், இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

சீா்காழி கடைவீதி அருகே நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சங்கத்தின் தலைவா் பாபு கே. விஜயன் தலைமை வகித்தாா். செயலாளா் முகம்மது யூசுப், செயற்குழு உறுப்பினா் கனக. கஜேந்திரன் ஆகியோா் இரங்கல் உரை நிகழ்த்தினா். துணைத் தலைவா் நாவுக்கரசன், துணைச் செயலாளா் நாகேஷ்வரன், பொருளாளா் விஜய் ஆனந்த் மற்றும் வணிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.