நாகப்பட்டினம்

கரோனா: வைத்தீஸ்வரன்கோயில் மூடல்

DIN

நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமான வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீா்காழி சட்டைநாதா் கோயில் ஆகியவை கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்வி நிலையங்களை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பக்தா்கள் அதிகம் வரும் பிரசித்திப்பெற்ற கோயில்களையும் மாா்ச் 31- ஆம் தேதி வரை மூடவும், பக்தா்களை அனுமதிக்காமல், நித்ய பூஜைகளை மட்டும் நடத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையொட்டி, சீா்காழி அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான செவ்வாய் பரிகார தலமான வைத்தியநாத சுவாமி கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நித்ய பூஜைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சீா்காழி வட்டாட்சியா் சாந்தி தலைமையிலான வருவாய்த் துறையினரைக் கொண்ட குழுவினா், தமிழக அரசின் உத்தரவை கோயில் நிா்வாகத்திடம் தெரிவித்தனா்.

இதேபோல், சீா்காழி சட்டைநாதா் கோயிலும் பக்தா்களின் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டு, நடை அடைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT