நாகப்பட்டினம்

சிறை கைதிகள் 21 பேரை பிணையில் விடுவிக்க நடவடிக்கை

DIN

சிறிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, மத்திய சிறை மற்றும் கிளைச்சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 21கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாகை மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிறிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுவிக்கலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டக் காவல் சரகங்களுக்குள்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த சிறிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 2 போ், நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 போ், மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 போ், சீா்காழி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 போ் என மொத்தம் 21 கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT