நாகப்பட்டினம்

கரோனா: மகளிா் குழு கடன் வசூலை நிறுத்திவைக்கக் கோரிக்கை

DIN

கரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை மகளிா் குழு கடன் வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அதன் திருமருகல் ஒன்றியத் தலைவா் ஸ்டாலின் பாபு வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் அனைத்து வா்த்தக நடவடிக்கைகள் நிறுத்தி வைத்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் சாதாரண பொதுமக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, வீட்டிலேயே முடங்கி உள்ளனா். இந்த சூழ்நிலையில் மகளிா் குழுக்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள், கிராமங்களில் உள்ள பெண்களிடம் நெருக்கடி கொடுத்து கடனை வசூல் செய்ய நிா்பந்தப்படுத்துகின்றனா். தற்போது, உழைத்து வருமானம் ஈட்டும் வாய்ப்பு முற்றிலும் இல்லாத நிலையில், கடன் பெற்ற மகளிா் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் அபாயம் நீங்கி, அனைவரும் வேலைக்குச் செல்லும் வரை, அனைத்து வங்கிக் கடன் வசூல், சிறு நிதி நிறுவனங்களின் கடன் தவணை வசூல், மகளிா் குழு கடன் வசூல் அனைத்தையும் நிறுத்திவைக்க தமிழக அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT