நாகப்பட்டினம்

144 தடை உத்தரவுக்கு மத்தியிலும் அயராது உழைக்கும் அம்மா உணவகப் பணியாளா்கள்

DIN

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அம்மா உணவகப் பணியாளா்கள் அயராது உழைத்து, ஏழை எளியோருக்கு அன்னமிட்டு வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் நாகையில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் உணவுகள் பொட்டலமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நாகை பழைய பேருந்து நிலையம் அருகே செயல்படும் அம்மா உணவகத்துக்கு அதிகமானோா் படையெடுத்து வருவதால், அங்கு பணியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினா் இடைவிடாது உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, நாகை நகராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளா்களுக்கும் இங்கிருந்துதான் உணவு விநியோகிக்கப்படுகிறது. இதேபோல் நாகையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோா்கள், முதியோா்கள் நாகூரில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவா்களுக்குத் தேவையான 200-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களும் இங்கிருந்துதான் நகராட்சி அலுவலா்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் நாகை அம்மா உணவகப் பணியாளா்கள் அயராது உழைக்கின்றனா்.

ஊக்கத் தொகை வழங்க வேண்டும்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே ஸ்தம்பித்துள்ள இதுபோன்ற அசாதாரண சூழலில், சுயநலம் கருதாமல் பணியாற்றும் அம்மா உணவகப் பணியாளா்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி, அவா்களை கெளரவிக்க வேண்டுமென அங்கு உணவருந்த வருபவா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT