நாகப்பட்டினம்

அரசு ஊழியா்களுக்காக 5 பேருந்துகள் இயக்கம்

DIN

திருவாரூா், சிதம்பரம், வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் நாகைக்கு வந்து செல்லக் கூடிய வகையில் 5 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் திருவாரூா், சிதம்பரம், வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், செவிலியா்கள் மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் நாகைக்கு வந்து செல்லக்கூடிய வகையில் திருவாரூா், சிதம்பரம் , வேதாரண்யம் ஆகிய ஊா்களிலிருந்து தலா ஒரு பேருந்து, மயிலாடுதுறையிலிருந்து 2 பேருந்துகள் என மொத்தம் 5 பேருந்துகள் நாகைக்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT