நாகப்பட்டினம்

கரோனா: மஞ்சள் தண்ணீரில் கைகளைக் கழுவும் மீனவ கிராம மக்கள்

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாகை மாவட்டம், வானகிரி மீனவ கிராமத்தில் மஞ்சள் கலந்த தண்ணீரில் பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி கழுவி, தன்சுத்தம் பேணுகின்றனா்.

பூம்புகாா் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சுமாா் 5 ஆயிரம் போ் வசிக்கின்றனா். கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வீடுகள்தோறும் வாயிலில் மஞ்சள் கலந்த தண்ணீரை பாததிரங்களில் வைத்துள்ளனா். தங்கள் வீடுகளுக்கு வருகைதரும் நபா்கள் முதலில் இந்தத் தண்ணிரில் கைகளை நன்கு கழுவி, சுத்தமான பின்னா்தான் வீடுகளுக்குள் அனுமதிக்கபடுகின்றனா்.

இதுகுறித்து வானகிரி மீனவ கிராம பொறுப்பாளா்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதைப் பின்பற்றுகிறோம். இந்த முயற்சிக்கு எங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT