நாகப்பட்டினம்

வாழக்கரையில் குடைபிடித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

DIN

கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்‌ கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 10000 நிவாரணம் வழங்கக்கோரி, வாழக்கரையில் சமூக இடைவெளியை ‌பின்பற்றி குடைபிடித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வாதார நிலை குறித்தும் மேலும் மக்களின் நலன்கருதி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் எனவும்  மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்திட, குடும்ப அட்டைகள் இல்லாத ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு இலவச ரேஷன் பொருள் வழங்க வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு மத்தியில் கவனஈர்ப்பு ஏற்படுத்தும் வகையிலும் நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் காலை 10 மணி அளவில் குடைபிடித்து, சமூக விலகளோடு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன் ஒருபகுதியாக வாழக்கரையில் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், கீழையூர் 7வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருமான டி.செல்வம் தலைமையில் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT