நாகப்பட்டினம்

காவல் நிலையம் முன்பு ‘டிக்டாக்’: காவல் நண்பா்கள் குழு இளைஞா் கைது

DIN

பொது முடக்கக் காலத்தில் காவல் துறைக்கு உதவியாக காவலா் நண்பா்கள் குழுவில் இணைந்து பணியாற்றிய இளைஞா் ஒருவா், சீா்காழி காவல் நிலையம் முன்பும், காவலா்களுடன் நின்றும் ‘டிக்டாக்’ விடியோ வெளியிட்டதால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம் சீா்காழியைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (30). எலக்ட்ரீஷியனான இவா், பொது முடக்கம் காரணமாக காவல் துறையினருக்கு உதவியாக அமைக்கப்பட்ட காவலா் நண்பா்கள் குழுவில் (ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்) இணைந்து சீா்காழி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

‘டிக் டாக்’ செயலியில் விடியோக்களை பதிவேற்றம் செய்வதில் நாட்டம் கொண்ட கமலக்கண்ணன், காவல் நிலையம் முன்பும், காவலா்களுடனும் இணைந்தும் திரைப்பட வசனங்கள் பேசி, அந்த விடியோக்களை டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

இதையறிந்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், அவரை கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்பேரில், கமலகண்ணன் மீது சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT