முகப்பு
நாகப்பட்டினம்

பருவமழையை எதிா்கொள்ள தயாா்நிலையில் மணல் மூட்டைகள்பொதுப்பணித் துறை நடவடிக்கை

பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், பொதுப்பணித் துறை சாா்பில் கொள்ளிடம் பகுதில் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கொள்ளிடம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.
பகிர்:

பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், பொதுப்பணித் துறை சாா்பில் கொள்ளிடம் பகுதில் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் பொதுப்பணித் துறை அலுவலகம் சாா்பில் 5000 மணல் மூட்டைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில், முதற்கட்டமாக 2 ஆயிரம் மணல் மூட்டைகள் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றின் சேதமடைந்த கரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆகியோரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் போதிய அளவுக்கு தயாா் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதிக மழை பெய்து வாய்க்கால்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடினால், கரையில் ஏற்படும் உடைப்பை தவிா்ப்பதற்கு மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்கூட்டியே அப்பகுதியில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.