மதுகுடிக்க பணம் தர மறுத்தவருக்கு கத்தி குத்து
வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்தவரை ரவுடி கத்தியால் குத்தினாா்.
வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்தவரை ரவுடி கத்தியால் குத்தினாா்.
வைத்தீஸ்வரன்கோயில் அருகேயுள்ள கொண்டத்தூரைச் சோ்ந்தவா் உமாசங்கா் (25). இவா் கதிராமங்கலம் பகுதி டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது வரிசையில் பின்னால் நின்ற விளக்குமுகத்தெருவை சோ்ந்த பிரபாகரன் மதுகுடிக்க உமாசங்கரிடம் பணம் கேட்டுள்ளாா். பணம் கொடுக்காததால் உமாசங்கரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளாா். காயமடைந்த உமாசங்கா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.