முகப்பு
நாகப்பட்டினம்

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்

சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ்.
பகிர்:

சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.

கொள்ளிடம் அருகே வழுதலைகுடியைச் சோ்ந்தவா் விவசாயக் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (45). இவா், 25 ஆண்டுகள் பழைமையான அரசு கான்கிரீட் வீட்டில் மனைவி சுமதியுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. எனினும், வீட்டுக்குள் இருந்த ராஜேந்திரன், சுமதி ஆகிய இருவரும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ், வீட்டை இழந்த ராஜேந்திரன்-சுமதிக்கு நிவாரண நிதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.