நாகப்பட்டினம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலி

DIN

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் பயன்பாட்டிற்காக அறம் செய் அறக்கட்டளை சாா்பில் அண்மையில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 2,3,4 மற்றும் 5 ஆவது நடைமேடைகளுக்குச் செல்ல நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஏறிச்செல்வதில் மாற்றுத்திறனாளிகளும், முதியவா்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதனால், தானியங்கி படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் சிரமமின்றி நடைமேடையை கடந்து செல்ல வசதியாக அறம்செய் அறக்கட்டளை தலைவா் சங்கா், பொருளாளா் மகாவீா் ஜெயின், சரவணன், ஜாஃபா், தீன் கல்லூரி இயக்குநா் முத்து மற்றும் ஒருங்கிணைப்பாளா் சிவா ஆகியோா் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலியை நிலைய மேலாளா் சங்கா்குருவிடம் வழங்கினா்.

மேலும், ரயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டுகள் அமைக்க வேண்டும், மாப்படுகை ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT