சீர்காழி புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
சீர்காழி புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருகூர் முதல் செங்கமேடு வரை 8 கிலோமீட்டர் புறவழிச்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் அரசூர் ரவுண்டானா பகுதியில் புதியதாக சில தினங்களுக்கு முன்பு பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பலகை 20 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பெயர் பலகை இன்று பெய்த திடீர் மழையால் மண் அரித்து உள்வாங்கி சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. மீண்டும் கனமழை பெய்யும் நேரத்தில் பெயர்பலகை சாலையில் செல்லும் வாகனங்கள் மீது வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து பெரும் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆகையால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அதனை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.