நாகப்பட்டினம்

மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தொடக்க விழா அண்ணா பல்கலைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் செயலா் கே. காா்த்திகேயன் விழாவுக்கு தலைமை வகித்து, கடின உழைப்புக்கு நிகரானது எதுவும் இல்லை என்று பேசினாா். கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா் வி.தமிழ்ச்செல்வன், கல்லூரி துணை முதல்வா் எஸ். செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோா் இணையதளம் வழியாக பங்கேற்றனா். விழாவில், சிறப்பு விருந்தினராக ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் தலைவா் என். விஜயரங்கன் பங்கேற்று கல்லூரியின் சிறப்பம்சங்களையும், கல்லூரியில் பயின்ற மாணவா்கள் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் நல்ல பணிகளில் பணியாற்றி வருவது குறித்தும் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT