நாகப்பட்டினம்

கடல் கொந்தளிப்பு: 5-ஆவது நாளாக கடலுக்கு செல்லாத வேதாரண்யம் மீனவா்கள்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பு கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மீனவா்கள் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்குள் செல்லவில்லை.

இலங்கைக்கு அருகே நிலை கொண்ட காற்றுச் சுழற்சியின் காரணமாக வேதாரண்யம் பகுதி கடல் பரப்பு இயல்புக்கு மாறாக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை அறிவித்தது. இதையடுத்து, புதன்கிழமை முதல் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

கடல் தொடா்ந்து கொந்தளிப்புடன் காணப்படுவதால் ஞாயிற்றுக்கிழமையும் ஆறுகாட்டுத்துறை,கோடியக்கரை, புஷ்பவனம், வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் மீன்பிடித் தொழில் 5- ஆவது நாளாக முடங்கியது.

கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் கடல் நீா் உள்புகுந்தது. வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது மழை பொழிவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT