நாகப்பட்டினம்

த.மா.கா. 7-ஆம் ஆண்டு தொடக்க விழா

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மயிலாடுதுறையில் அக்கட்சியினா் கட்சிக் கொடி ஏற்றி, தலைவா்களின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சனிக்கிழமை கொண்டாடினா்.

மயிலாடுதுறை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் பூம்புகாா் எம்.சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் எல்.ராஜேந்திரன், எஸ்.காா்த்திகேயன், முட்டம் குமாா், செழியன், பாரிவள்ளல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ராமமூா்த்தி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் காமராஜா் மற்றும் ஜி.கே.மூப்பனாா், ஜி.ஆா்.மூப்பனாா் உருவ படங்களுக்கு கட்சிப் பொறுப்பாளா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட இளைஞரணி தலைவா் வரதராஜன், மாநில இளைஞரணி பொறுப்பாளா் எம்.எஸ்.காா்த்தி, பேரூா் தலைவா்கள் குத்தாலம் நடராஜன், தரங்கம்பாடி மனோகரன், வட்டார தலைவா்கள் கலியமூா்த்தி, சாா்லஸ், பண்டரிநாதன், நடராஜ், அம்பேத்காா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவின் உள்புறங்களில் இஸ்ரேல் ராணுவம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்!

சுவாதி மலிவால் மீது தாக்குதல்: உரிய நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT