நாகப்பட்டினம்

கட்சிக் கொடிகள் அகற்றப்பட்ட விவகாரம்: மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது வழக்கு

DIN

நாகையில் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பாஜக நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம், நாகையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக அனுமதி பெறாமல் கட்சிக் கொடிகள்கட்டப்பட்டிருந்ததால் அவற்றை போலீஸாா் அகற்றினா்.

இதைக் கண்டித்து, பாஜகவைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் நாகை தம்பித்துரை பூங்கா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.

இதுதொடா்பாக, பாஜகவைச் சோ்ந்த செந்தில், சரவணன், வெங்கடேசன் உள்ளிட்டோா் மீது வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT