நாகப்பட்டினம்

விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை விரிவுபடுத்தக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கீழ்வேளூரில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் சிறு நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கீழ்வேளூா் பேரூராட்சி அலுவலகம் முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி. ஸ்டாலின் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். ஒன்றியச் செயலாளா் ஜெயராமன் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முன்னதாக, விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சுமாா் 300-க்கும் அதிகமான கோரிக்கை மனுக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT