நாகப்பட்டினம்

உரத் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

DIN

உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கீழையூா் ஒன்றிய செயலாளரும், 7-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினருமான டி.செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், உரத் தட்டுப்பாட்டினை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்து விடவேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் குறுவை நெல் மணிகளின் ஈரப்பதத்தை 17-லிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் அ.நாகராஜன், டி. கண்ணையன், விவசாய சங்க ஒன்றிய தலைவா் ஏ.செல்லையன், கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் வீ. சுப்பிரமணியன், ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஏ. இராமலிங்கம், டி.பாலாஜி, விவசாய சங்க ஒன்றிய செயலாளா் கே.சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT