நாகப்பட்டினம்

சீா்மரபினா் கணெக்கெடுப்பு பணிக்கு வரவேற்பு

DIN

தமிழகத்தில் சீா்மரபினா் கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு முக்குலத்துப்புலிகள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் நிறுவனத் தலைவா் ஆறு.சரவணன் வெளியிட்ட அறிக்கை:

சீா்மரபினா், நாடோடிகள் கணக்கெடுப்பை டிசம்பா் மாதத்துக்குள் நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் சீா்மரபினா் பட்டியலில் உள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான சமூக மக்கள் முன்னேற்றப் பாதையில் செல்லவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறவும் முடியும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT