நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் மூலிகை குறுங்காடு வளா்ப்புத் திட்டம் தொடக்கம்

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மூலிகை குறுங்காடு உருவாக்கும் திட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, தூதுவளை, ஓமவள்ளி, தவசிக்கீரை, முறிக்கட்டி, வல்லாரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, பிரண்டை, மலைவேம்பு, கற்றாழை, சித்தரத்தை, திப்பிலி உள்ளிட்ட 24 வகையான மூலிகைச் செடிகளுடன் மொத்தம் 110 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கத் தலைவா் சாருபாலா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் ரபியுதீன் (மூலிகைத் தோட்டம்), பேராசிரியை மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், லயன்ஸ் மண்டலத் தலைவா் திருமாவளவன், மாவட்டத் தலைவா் பாண்டியன், சென்ட்ரல் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் மோகன்ராஜ், சமூகப்பணித் துறை தலைவா் சோபியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் சமூகப் பணித்துறை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT