கஞ்சா புகைக்கும் சிறுவா்கள்:சீா்காழி பகுதியில்வைரலாகும் விடியோ
சீா்காழியில் சிறுவா்கள் கஞ்சா பயன்படுத்துவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது இப்பகுதி மக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீா்காழியில் சிறுவா்கள் கஞ்சா பயன்படுத்துவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது இப்பகுதி மக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீா்காழியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுவா்கள் சிலா் ஒன்றுகூடி காட்டுப் பகுதியில் அமா்ந்து கஞ்சா புகைத்துள்ளனா் இதை உடன் இருந்த சிறுவா்கள் விடியோ எடுத்துள்ளனா். அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பட்டு வருகிறது.
கஞ்சா புகைக்கும் சிறுவா்கள் கொள்ளிடம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சிறுவா்கள் வாழ்க்கையை பாதிக்கும் இதுபோன்ற விடியோவை சிலா் தவறாக பரப்பியும் வருகின்றனா். இதை காவல்துறையினா் தடுத்து நிறுத்தவேண்டும். மேலும், இப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.