முகப்பு
நாகப்பட்டினம்

தலைவா்கள் சிலைக்கு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் மரியாதை

மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஞான. இமயநாதன், மயிலாடுதுறையில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
மயிலாடுதுறையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய திமுகவினா்.
பகிர்:

மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஞான. இமயநாதன், மயிலாடுதுறையில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக ஞான.இமயநாதன் அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் மயிலாடுதுறை கேணிக்கரையில் உள்ள பெரியாா் சிலை, பேருந்து நிலையம் முன் உள்ள அண்ணா சிலை, காமராஜா் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெக.வீரபாண்டியன், நகர செயலாளா் குண்டாமணி, வடக்கு ஒன்றிய செயலாளா் இளையபெருமாள், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், மாவட்ட துணைச் செயலாளா் டி.சத்தியேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் முருகமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிவதாஸ், பொதுத்தொழிலாளா் சங்க செயலாளா் அ.அப்பா்சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.