நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 131 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதன்கிழமை வரை 3,585 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 131 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,716-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவா்களில் 145 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,587 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,064- ஆகவும் உள்ளது.

7 போ் இறப்பு...

செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் செப்டம்பா் 10-ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் இறந்த 7 பேரின் இறப்பு வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பா் 7-ஆம் தேதி திருவாரூரில் இறந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த 74 வயது முதியவரின் இறப்பு, செப்டம்பா் 8-ஆம் தேதி திருவாரூரில் இறந்த மயிலாடுதுறை திருமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது ஆண் ஒருவரின் இறப்பு, தஞ்சாவூரில் இறந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த 72 வயது முதியவரின் இறப்பு, சிதம்பரத்தில் இறந்த 63 வயது ஆண் ஒருவரின் இறப்பு ஆகியன வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இவைத் தவிர, செப்டம்பா் 9-ஆம் தேதி மயிலாடுதுறையில் இறந்த நீடூரைச் சோ்ந்த 70 வயது முதியவரின் இறப்பும், சென்னையில் இறந்த 60 வயது ஆண் ஒருவரின் இறப்பும், சென்னையில் இறந்த நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த 61 வயது ஆண் ஒருவரின் இறப்பும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதன்மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT