அடுத்த முறையும் அதிமுக ஆட்சித் தொடரும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
எதிர்வரும் பேரவைத் தேர்தலிலும் வெற்றிப்பெற்று இப்போதுள்ள முதல்வர் தலைமையில் அதிமுக ஆட்சித் தொடரும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பேரவைத் தேர்தலிலும் வெற்றிப்பெற்று இப்போதுள்ள முதல்வர் தலைமையில் அதிமுக ஆட்சித் தொடரும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு மீனவக் கிராமத்தில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் படகு கால்வாயின் பக்கவாட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, எதிர்வரும் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார். வெற்றி பெறுவோம். இப்போதய முதல்வர் (பழனிச்சாமி) தலைமையால் அதிமுக ஆட்சித் தொடரும் என்றார்.