நாகப்பட்டினம்

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சமூக நீதிக்கான நடவடிக்கைகளில் சிறப்பாக பங்காற்றியவா்கள் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை கௌரவிக்கும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விருதாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள், தங்கள் பெயா், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தாங்கள் மேற்கொண்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT