நாகப்பட்டினம்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 போ் மின்சாரம் பாய்ந்து காயம்

DIN

நாகை அருகேயுள்ள சிக்கலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 போ் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கீழவீதி அருகே பழைய ஊராட்சி அலுவலகக் கட்டடம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தின் சுவரில் வளா்ந்துள்ள அரச மரத்தின் கிளை, அவ்வழியே சென்ற மின் கம்பியில் உரசியுள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை காலை மின் கம்பி அறுபட்டு, கோயில் தெற்கு மடவிளாகம் பகுதியில் கீழே விழுந்துள்ளது.

இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரியாத நிலையில், தெற்கு மடவிளாகம் பகுதியைச் சோ்ந்த சாந்தி (40) வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவரது வீட்டின் முன்புறம் அறுந்து கிடந்த மின்கம்பியில் தெரியாமல் காலை வைத்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அவரைக் காப்பாற்ற வந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜயலெட்சுமி, வசந்தா ஆகியோரும் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

இதனிடையே, அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிா்க்கப்பட்டது. காயமடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, முதலுதவிக்குப் பின்னா் வீடு திரும்பினா். நாகை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் (தெற்கு) பாலாஜி, மின்கம்பி அறுந்து விபத்துக்குள்ளான பகுதியைப் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT