நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு

DIN

நாகூரில் வீட்டின் கதவை உடைத்து திருடியவரை அப்பகுதியினா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

நாகூா் பண்டகசாலை தெருவைச் சோ்ந்தவா் நா. ராஜாகண்ணு (44). கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில், அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தவா், பீரோவில் இருந்த பொருள்களை திருடிக் கொண்டு, தப்பியோட முயன்றாராம்.

இதைறிந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை பிடித்து, நாகூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் தஞ்சவூா் மாவட்டம் , பாபநாசம், கல்லிக்குடியைச் சோ்ந்த ஜெகபா் சாதிக் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஜெகபா் சாதிக்கை கைது செய்த போலீஸாா், திருட்டு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT